Sunday, November 25, 2012

சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் - த.இ.மு. முடிவு



சிதம்பரம் நகரத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கடுமையான மின்வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வரும் புதன் கிழமை(28.11.2012) அன்று காலை சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம் நடத்தப்படும் என சிதம்பரம் நகர தமிழக இளைஞர் முன்னணி முடிவு செய்துள்ளது.


இன்று மாலை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, தமிழக இளைஞர் முன்னணி நகரக் கிளைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கிளைத் தலைவர் தோழர் இராசேந்திரன் தலைமையேற்றார். 



வரும் 28.11.2012 புதன் அன்று, சிதம்பரம் நகர மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தலைமையில் நடத்துவதென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. 



மேலும், வரும் 30.11.2012 வெள்ளி அன்று, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழக இளைஞர் முன்னணி இணைந்து, 1956இல் தமிழ்நாடு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில், நடத்தும் தமிழகப் பெருவிழாவில் அனைவரும் குடும்பத்துடன் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. தமிழகப் பெருவிழாவை முன்னிட்டு, இன்று காலை முதல் மாலை வரை நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்கள் தமிழகப் பெருவிழா நிகழ்வில் பரிசளிப்பு நடைபெறுகின்றது.



சிதம்பரம் மின்வாரிய அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்திற்கு, பொது மக்களும், தொழில் முனைவோரும் ஆதரவை நல்க வேண்டுமென தமிழக இளைஞர் முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.

No comments:

Post a Comment