Wednesday, September 18, 2013

வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்ட - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது! சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை


“ தமிழ் நாடு என்ன திறந்த வீடா? வெளியாரின் வேட்டை காடா? “
வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்ட - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது! சிதம்பரத்தில் தமிழக இளைஞர் முன்னணி பரப்புரை 


வெளிமாநிலத்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை - குடும்ப அட்டை கொடுக்கக் கூடாது, தமிழ் நாட்டில் பிற மாநிலத்தவர் நிரந்தர சொத்து வாங்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தமிழக இளைஞர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

தமிழக இளைஞர் முன்னணி அமைப்பின் தமிழக துணைப் பொதுச் செயலாளர் தோழர், ஆ.குபேரன் தலைமையில் 04.09.2013 அன்று சிதம்பரம் காசுக்கடைத்தெரு தொடங்கி, லால்கான் தெரு, மேலவீதி, தெற்கு வீதி சபாநாயகர் தெரு, அண்ணாமலை நகர், கீழவீதி, வேணுகோபால் தெரு, செ.பி. கோயில் தெரு, ஓமகுளம் , மந்தகரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இப்பரப்புரையில். வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் என மக்களை சந்தித்து கோரிக்கையை விளக்கி துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.

தில்லை நடராசர் ஆலயத்தை சுற்றியுள்ள முதன்மை வீதிகளில் மட்டும் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மொத்த விற்பனை கிடங்குகள், காலி மனைகள் என மார்வாரி மலையாளி குசராத்தி சேட்டுகளின் பிடியில் உள்ளன.

இந்நிலையில் வெளியாரை வெளியேற்றக் கோரி நகரின் முக்கியப் பகுதிகளில் எழுதப்பட்டிருந்த சுவர் எழுத்துகள் , வெளியார் ஆதிக்கம் குறித்து நடத்தப்பட்ட பரபரப்பையும் பொதுமக்களிட்த்தில் வரவேற்பையும் ஆதரவை பெற்றது. சிதம்பரத்தில் வெளியாரின் ஆதிக்கம் குறித்து நகை வணிகர்கள், தானிய மொத்த விற்பனையாளர்கள் தொடங்கி சிறு வணிகம் நடத்துவோர் எனப் பலதரப்பட்டவர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கோரிக்கை வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் - வில்லைகள் கடைகள், தானிகள், தனியார் பேருந்துகளில் ஒட்டப்பட்டன.

பரப்புரையின் நிறைவாக 18.09.2013 காலை 11 மணிக்கு வெளிமாநிலத்தவர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை - குடும்ப அட்டை கொடுக்கக்கூடாது, தமிழ் நாட்டில் நிரந்தர சொத்து வாங்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக இளைஞர் முன்னணி நிர்வாகிகள் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

பரப்புரையில், த.இ.மு துணைப் பொதுச் செயலாளர் ஆ.குபேரன், த.இ.மு முன்னாள் துணைத் தலைவர் பா.பிரபாகரன், சிதம்பரம் நகரத் தலைவர் ந.இராசேந்திரன், து.செயலாளர் கி.சதீசுகுமார், நகரப் பொருளாளர் சு.சுகன்ராஜ், ப.க.கார்த்திக், இரா.எல்லாளன், செ.மணிமாறன், திருமாறன், அ.மணிகண்டன் தமிழக மாணவர் முன்னணி சிதம்பர நகர அமைப்பாளர் வே.சுப்ரமணியசிவா உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment