செயல்பாடுகள்


1991இல் தமிழக இளைஞர் முன்னணி தொடங்கப்பட்டதிலருந்து முன்னெடுக்கப்பட்ட மிக முக்கியமானப் போராட்டங்களும் பரப்புரை இயக்கங்களும் இவை..!

1991

ஏப்ரல் 20, 21 - தமிழ் வழிக் கல்வியை ஆதரித்து, தமிழகமெங்கும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் மிதிவண்டிப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

திசம்பர் 30 - கர்நாடகத் தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் வகையில் கர்நாடக முதல்வர் பங்காரப்பாவின் கொடும்பாவி தூக்கிலிடப்பட்டு, பின் எரியூட்டிய போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

1992

மார்ச் 28 - தமிழக இளைஞர் முன்னணி சார்பில் அறிவிக்கப்பட்ட, தமிழர் உரிமை முழக்கப் பிரச்சார இயக்கம் தடை செய்யப்பட்டது. பரப்புரையை முன்னெடுத்த, 25 தோழர்களைக் காவல்துறை கைது செய்த்து.

1993

சனவரி 25 - பெரிய புகைவண்டி நிலையங்களில் ஒரு நாளைக்கு ஒரு சொல் என்ற விதத்தில் கரும்பலகையில் இந்தி எழுத்தை எழுதி அதற்கு தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பொருள் எழுதி பரப்புரை செய்யும் வேலையைத் தொடங்கியது இந்திய அரசு. அம்முடிவை எதிர்க்கும் வகையில், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தியை அழிக்கும் போரட்டத்தை முன்னெடுத்தது தமிழக இளைஞர் முன்னணி.

1994

பிப்ரவரி 7, 8 - தமிழக இளைஞர் முன்னணி இரண்டாவது தமிழக மாநாடு சிதம்பரத்தில் நடைபெறவிருந்த நிலையில், மார்வாடிகள் தூண்டுதலால் மாநாடு தடை செய்யப்பட்டது.

ஏப்ரல் 19 - மார்வாடிகள் கடை முன் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு இடங்களில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

சூன் 27 - தொலைக்காட்சியில் இந்தி திணிப்பைக் கண்டித்து தொலைக்காட்சி நிலையம் முன்பு முற்றுகை ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது தமிழக இளைஞர் முன்னணி.

திசம்பர்  1994 - மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட, தீர்ப்புகள் வழங்க வலியுறுத்தி நீதிமன்றங்கள் முன்பு தமிழக இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


1995

ஏப்ரல் 21 – தமிழக இளைஞர்களை போதையில் வீழத்தும் பான்பராக்கை உள்ளிட்டப் போதைப் பாக்குகளைத் தடை செய்யக் கோரி தமிழகம் தழுவியப் பரப்புரை இயக்கத்தை முன்னெடுத்தது தமிழக இளைஞர் முன்னணி.

சூன் 24, 25, 26 - தஞ்சையில் சாதி வேறுபாடுகள் களைந்து தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், “தீண்டாமை ஒழிப்பு - தமிழர் ஒற்றுமைநடைப்பயணம் தமிழக இளைஞர் முன்னணி சார்பில்  நடைபெற்றது.

செப்டம்பர் 19 - தமிழக இளைஞர்களை போதையில் வீழத்தும் பான்பராக் போதைப் பொருளை எரிக்கும் போராட்டத்தை நடத்தியது, தமிழக இளைஞர் முன்னணி.

திசம்பர் 4 – புதிதாகத் திறக்கப்பட்ட இலங்கை வங்கியை இழுத்துப் பூட்டும் போராட்டத்தை தமிழகத் தலைநகர் சென்னையில், எழுச்சியுடன் நடத்தியது தமிழக இளைஞர் முன்னணி.

1996

சனவரி 25 – மொழிப் போர் ஈகியர் நினைவு நாளில் தஞ்சை வாழ்நாள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள இந்தி, ஆங்கில பெயர்ப் பலகைகள் அழித்த தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.

1997

ஏப்ரல் 21 – போதைப் பாக்கான பான்பராக்கை தடை செய்யக் கோரி சென்னை கோட்டை முன் மறியலில் ஈடுபட்ட தமிழக இளைஞர் முன்னணத் தோழர்கள் 159 பேர் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 12 – தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்ததைக் கண்டித்து, அமெரிக்க அரசுக் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை நடத்தியது, தமிழக இளைஞர் முன்னணி.

அக்டோபர் 17,18 – தமிழக இளைஞர் முன்னணி மூன்றாவது தமிழக மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றுது.

திசம்பர் 3-7 – ஜெயின் ஆணையை ரத்து செய்யக் கோரியும், இராசீவ் கொலையில் தொடர்புபடுத்தப்பட்ட அப்பாவிகளை விடுதலை செய்யக் கோரியும் தமிழக இளைஞர் முன்னணி சார்பில் பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

1998

ஆகஸ்ட் 20-26 - தஞ்சை மாவட்டத்தில் காவிரி உரிமை மீட்புப் பரப்புரை இயக்கம் நடைபெற்றுது.

1999

பிப்ரவரி 5,6,7 - தீண்டாமை ஒழிப்பு - தமிழர் ஒற்றுமைப் பரப்புரை இயக்கம் தமிழக இளைஞர் முன்னணித் தோழர்களால் முன்னெடுக்கப்பட்டது.

மார்ச் 23 - தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி, தமிழக இளைஞர் முன்னணி சார்பில் அடையாளப் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது.



1 comment:

  1. நீண்ட நெடிய போராட்ட வரலாறு கொண்ட தமிழக இளைஞர் முன்னணியின் போராட்ட களங்களில் தமிழக இளைஞர்கள் அணி திரள வேண்டும்.

    ReplyDelete